Principal's Desk

Dr. [Principal's Name]
Principal, DIET Chennai
✍️"Educators Today, Architects of Tomorrow."
Greetings!
At DIET Chennai, we envision an education system where every child is empowered to dream, to achieve, and to transform the world. As educators of future teachers, we are not merely preparing individuals for classrooms — we are nurturing architects of a better society.
Our mission goes beyond imparting knowledge; it is about igniting minds with curiosity, compassion, and courage. We stand committed to building a generation of educators who are adaptable, visionary, and deeply rooted in the values of equity and excellence.
In a rapidly changing world, the teacher’s role is more vital than ever. At DIET Chennai, we embrace innovation while honouring the timeless principles of humanity, integrity, and lifelong learning. Our journey is one of continual growth — pushing the boundaries of what is possible in teaching and learning.
I invite you to join us in this journey of transformation. Let us dream boldly, learn deeply, and lead fearlessly — for the future we shape today will become the reality of tomorrow.
Together, let us be the change.
Principal
District Institute of Education and Training,
Chennai
✍️"இன்றைய கல்வியாளர்கள், நாளைய சமூகக் கட்டமைப்பாளர்கள்"
வணக்கம்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கனவு காணவும், சாதிக்கவும், உலகை மாற்றவும் அதிகாரம் அளிக்கும் ஒரு கல்வி முறையை உருவாக்குவதற்கு மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தினரான நாங்கள் முயற்சி செய்கிறோம். எதிர்கால ஆசிரியர்களின் கல்வியாளர்களாக, வகுப்பறை ஆசிரியர்களைத் தயார்படுத்துவதோடு மட்டுமல்லாமல் - தமிழ்ச் சமூகத்தைக் கட்டமைப்பவர்களை வளர்த்தெடுப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
அறிவை மட்டும் வழங்குவதைத் தாண்டி பள்ளிக் குழந்தைகளின் ஆர்வம், இரக்கம் மற்றும் தைரிய குணங்களால் சமுதாயத்தின் மனதைத் தூண்டுவதே எங்கள் நோக்கம். தகவமைப்புத் திறனும், தொலைநோக்குப் பார்வையும், சமத்துவமும், சிறந்து விளங்கும் மதிப்புகளில் ஆழமாக வேரூன்றியும் திகழும் ஆசிரியர்களின் தலைமுறையை உருவாக்கவே நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
வேகமாக மாறிவரும் உலகில், ஆசிரியரின் பங்கு முன்பு எப்போதையும் விட தற்போது மிக முக்கியமானது. சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மனிதநேயம், நேர்மை, வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகிய காலத்தால் அழியாத கொள்கைகளை மதிக்கும் அதே வேளையில், புதுமைகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் பயணம் ஒரு தொடர்ச்சியான வளர்ச்சியின் தொடக்கமே. இந்தப் பயணம் கற்பித்தல் மற்றும் கற்றலில் எங்களால் சாத்தியமானவற்றின் எல்லைகளைத் விரிவாக்குகிறது.
இந்த மாற்றப் பயணத்தில் எங்களுடன் சேர உங்களை அழைக்கிறேன். தைரியமாகக் கனவு காண்போம்; ஆழமாகக் கற்றுக்கொள்வோம்; அச்சமின்றி வழிநடத்துவோம். ஏனென்றால் இன்று நாம் வடிவமைக்கும் எதிர்காலம் நாளைய நம்பிக்கையாக மாறும்.
மாற்றத்தின் விதைகளாக இணைந்தே மாறுவோம்.
முதல்வர்
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
சென்னை